சீனாவின் அதிரடி அறிவிப்புக் காரணமாக இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் மின்சார கார்களின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் உற்பத்தி அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டாடா, மஹிந்திரா ,உட்பட பல முன்னணி நிறுவனங்கள் மின்சார கார் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
இந்த நிலையில், மின்சார கார்களின் உற்பத்திக்கு தேவையான மிக முக்கிய மூலப்பொருளான காந்தங்களை இறக்கு மதி செய்வதற்கு சீன அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.
இந்தியா இறக்குமதி செய்யும் காந்தங்களில் 90% சீனாவிலிருந்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில் சீனாவின் அதிரடி அறிவிப்பு மின்சார கார் உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, மஹிந்திரா உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் இந்த காந்த ஏற்றுமதி தடையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
உண்மையில், சீனா இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் அமெரிக்கா என்றும், அமெரிக்காவை கட்டுப்படுத்தவே அரிய உலோகங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.எவ்வாறு இருப்பினும் , இந்த அறிவிப்பினால் இந்தியா வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.