நடந்துமுடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியின் பின்னர் நடைபெற்ற றோயல் ஜெலஞ்சேர்ஸ் பென்குலூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ,இந்த சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் தலா 10 இலட்சம் இந்திய ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அறிவித்த இழப்பீடு தொகையை ரூ.25 இலட்சம் இந்திய ரூபாவாக உயர்த்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.



















