அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனி சேவை அரசியலமைப்பை அமுல் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதைத் தொடங்கத் தவறியமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இன்று காலை 6 மணிக்கு இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வேலை நிறுத்தப் போராட்டம்” அனைத்து அரச கால்நடை அலுவலகங்களின் பணிகளுக்கும் இடையூறு விளைவிக்கும்” என அதன் தலைவர் வைத்தியர் உபுல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















