நேஷன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி ஸ்பெயினை வீழ்த்தியதை அடுத்து, கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
ஜூன் 8, ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியின் அரினா முனிச்சில் உள்ள அலையன்ஸ் அரங்கில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில், யூரோ சாம்பியன்களை பெனால்டி ஷூட்அவுட்டில் வீழ்த்தி, போர்ச்சுகல் தனது இரண்டாவது நேஷன்ஸ் லீக் பட்டத்தை வென்றது.
மேலதிக நேரத்தில் 2-2 என சமநிலையில் இருந்த போர்ச்சுகல், தனது 5 ஸ்பாட் கிக்குகளையும் பயன்படுத்தி பெனால்டி ஷூட்அவுட்டில் ஸ்பெயினை 5-3 என வீழ்த்தியது.
போட்டியை மேலதிக நேரத்திற்கு எடுத்துச் செல்ல கோல் அடித்த ரொனால்டோ, தனது அணி போட்டியை வென்ற பின்னர் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
இறுதிப் போட்டியில் ரொனால்டோவின் கோல் அவரது சர்வதேச வாழ்க்கையில் 138 வது கோல் ஆகும்.
இந்த கோலின் மூலம், சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரராக, லியோனல் மெஸ்ஸி மற்றும் சுனில் சேத்ரி போன்றவர்களை முந்தினார்.