இஸ்ரேலிய கடற்படை முற்றுகையை மீறி, காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு வர சென்ற ஒரு தொண்டு கப்பலை இஸ்ரேலியப் படைகள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளன.
மேலும், ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் உட்பட 12 பேர் கொண்ட படகு இப்போது இஸ்ரேலில் உள்ள ஒரு துறைமுகத்தை நோக்கிச் செல்கிறது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (08) தெரிவித்தனர்.
பிரித்தானிய கொடியுடன் கூடிய மேட்லீன் என்ற படகு, பாலஸ்தீன சார்பு சுதந்திர புளோட்டிலா கூட்டணி (FFC) ஏற்பாடு செய்த ஒரு பணியின் ஒரு பகுதியாகும்.
ஜூன் 6 ஆம் திகதி சிசிலியில் இருந்து புறப்பட்ட இது, ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் காசா பகுதியை அடைய இலக்கு வைத்திருந்தது.
இஸ்ரேலிய துருப்புக்களால் ஏறப்பட்டது என்று அந்தக் குழு டெலிகிராமில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், படகு கரையை அடைவதற்கு முன்பே ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேலிய படையினரால் தடுத்து நிறத்தப்பட்டதாக FFC அதன் டெலிகிராம் கணக்கில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சகம் பின்னர் படகு இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தியது.
12 பேர் கொண்ட குழுவினரில் ஸ்வீடிஷ் காலநிலை பிரச்சாரகர் துன்பெர்க் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன் ஆகியோர் அடங்குவர்.