ஈரானில் உள்ள 20 நகரங்களில் உள்ள வீதிகளில் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதற்கு ஈரான் அரசு தடைவிதித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஈரானின் தலைநகர் தெஹ்ரனில் உள்ள தெருக்களில் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல முதலில் தடை விதிக்கப்பட்டது.
நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்வதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவு மேலும் 20 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெர்மன்ஷா, லாம், ஹமதான், கெர்மன், போரோஜெர்டு, ரோபர்ட் கரீம், லாவாசனத், கோல்ஸ்டன் உள்ளிட்ட நகரங்களிலும் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல தடை செல்லப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் நாய் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.