ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று(09) கொக்குவிலில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கலாநிதி சர்வேஸ்வரன், வேந்தன், ப.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூர் ஆட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 43 உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.