தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.
அத்துடன் வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.