2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் கூறுகையில், இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னர், அதன் மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட முன்மொழிவின் மூலம், அரசாங்கம் மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஒருங்கிணைந்த மின்சார ஊழியர் சங்கம் தெரிவிக்கிறது.
அதன் செயலாளர் எல்.பி.கே. குமாமுல்ல, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, மின்சார சபையை ஆறு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.