டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையம் சர்வதேச விமானங்களுக்கு மூடப்பட்டதால் தற்போது இஸ்ரேலுக்குள் நுழைய முடியாத இலங்கையர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து வழியாக பயண ஏற்பாடுகளைச் செய்யலாம்.
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பயணிக்க விரும்புவோர் அந்தந்த நாடுகளிலிருந்து குறுகிய கால விசாக்களைப் பெற்று, ஈலாட் நகருக்கு அருகில் உள்ளவை உட்பட நில எல்லைக் கடவைகள் வழியாக இஸ்ரேலுக்குள் நுழையலாம் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தின் தூதர் நிமல் பண்டாரா உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலில் உள்ள தூதர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடனான ஒரு மாநாட்டின் போது, பென் குரியன் விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான குறிப்பிட்ட திகதியை தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் கூறியதாக தூதர் கூறினார்.
எனினும், அவசர பயணத் தேவைகள் உள்ளவர்கள் ஜோர்டானில் உள்ள அம்மான் விமான நிலையம் அல்லது எகிப்தில் உள்ள கெய்ரோ விமான நிலையம் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து வெளியேறலாம் என்று அவர் வலியுறுத்தினார்.