கொழும்பு மாநகர சபையின் (CMC) 26 ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) வ்ரே காலி பால்தசார் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
திங்கட்கிழமை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 61 வாக்குகளைப் பெற்று அவர் கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரிசா சாரூக் 54 வாக்குகளை பெற்றார்.
அதேநேரம், கொழும்பு மாநகர சபையின் இரண்டாவது பெண் மேயராக வ்ரே காலி பால்தசார் வரலாறு படைத்தார்.