கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் 2 மகள்கள் மற்றும் மருமகனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 3 சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (19) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.