கலிபோர்னியாவின் தஹோ ஏரியில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையின் போது படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த அனர்த்தத்தில் காணாமல் போன இறுதி நபரின் உடல் திங்கள்கிழமை (23) கண்டெடுக்கப்பட்டது.
இதனால் இறப்பு எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை (21) பிற்பகல் ஏரியின் தென்மேற்கு பகுதியில் புயல் காரணமாக அதிக அலைகள் எழுந்ததால், 27 அடி (8 மீட்டர்) உயரமுள்ள படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது படகில் பத்து பேர் இருந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தினை அடுத்து இரண்டு பேர் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சனிக்கிழமை பின்னர் ஆறு உடல்கள் மீட்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழாவது உடல் கண்டெடுக்கப்பட்டதாக எல் டொராடோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பின்னர் திங்கட்கிழமை காணாமல் போன கடைசி நபர் உயரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

















