பிரபல திரைப்பட நடிகையான மீனா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பாஜக கட்சியில் இணைய போவதாக வதந்திகள் உலா வந்தன.
இதற்கிடையே அவர் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீனா விரைவில் மத்திய இணையமைச்சர் ஆக்கப்படலாம் என தகவல் உலாவும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை சினிமாவில் வெற்றி கொடி நாட்டி வருபவர் நடிகை மீனா.
தமிழ் திரையுலகில் 45 ஆண்டுகளை கடந்து பயணித்து வருகிறார்.
இதற்கு இடையே டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஒருவரின் இல்லத்துக்கு மீனா சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேவேளை, திடீரென மீனாவுக்கு அரசியல் ஆசை வந்ததாக சொல்லப்பட்டது.
தொடர்ந்து பாஜகவில் அவர் இணைய போவதாகவும் தகவல்கள் உலாவின. ஆனால் அது போன்ற தகவல்களை மீனா மறுத்து வந்தார்.
இந்த நிலையில் தான் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார் மீனா. குறிப்பாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவர் சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் பாஜக மூத்த தலைவர்கள் சிலரை அவர் சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் பிரபலமான நடிகர் நடிகைகளை பாஜக கட்சிக்குள் இழுத்து வருகிறது. அந்த வகையில் தான் குஷ்பூ, சரத்குமார் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பு அவர்களுக்கு முக்கிய பதவி அளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.