தந்திரோபாய அணு ஆயுதங்களைச் செலுத்தும் திறன் கொண்ட ஒரு தொகை F-35A போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் செவ்வாயன்று (24) அறிவித்தது.
இது ஒரு தலைமுறையில் அதன் அணுசக்தித் தடுப்புப் பிரிவின் மிகப்பெரிய விரிவாக்கம் என்று அது விவரித்தது.
லாக்ஹீட் மார்ட்டின் ரக ஜெட் விமானங்களை வாங்குவது, பனிப்போர் முடிந்த பின்னர் முதல் முறையாக இங்கிலாந்தின் விமானப்படை அணு ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் என்று டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
தீவிரமான நிச்சயமற்ற தன்மை நிறைந்த ஒரு சகாப்தத்தில், நாம் இனி அமைதியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, அதனால்தான் எமது அரசாங்கம் நமது தேசிய பாதுகாப்பில் முதலீடு செய்கிறது என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
அண்மைய நாட்களில் ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் விரோதத்தை எதிர்கொள்வதாலும், ஐரோப்பிய பாதுகாப்பின் பாதுகாவலராக அமெரிக்கா தனது பாரம்பரிய பங்கிலிருந்து பின்வாங்குவதாலும், இங்கிலாந்தின் பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது.
மேலும், அதன் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட அதன் இராணுவப் படைகளை மேம்படுத்துகிறது.