அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முன்னேற்றுவதற்காக, கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்காகக் கொண்ட அதன் டிஜிட்டல் சேவை வரியை ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகுதியில் இரத்து செய்தது.
வரி நடைமுறைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த முன்னேற்றம் வந்தது.
கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் ஜூலை 21 ஆம் திகதிக்குள் ஒரு ஒப்பந்தத்தில் உடன்படுவதற்காக வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவார்கள் என்று கனடாவின் நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து விதிக்கப்பட்ட வரி தொடர்பான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை வெள்ளிக்கிழமை திடீரென இரத்து செய்த ட்ரம்ப், இது ஒரு “அப்பட்டமான தாக்குதல்” என்று கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை தனது கருத்துக்களை மீண்டும் வலியுறுத்திய அவர், அடுத்த வாரத்திற்குள் கனேடிய பொருட்களுக்கு புதிய வரி விகிதத்தை நிர்ணயிப்பதாக உறுதியளித்தார்.
இது ஒப்பீட்டளவில் அமைதியான காலத்திற்குப் பின்னர் அமெரிக்க-கனடா உறவுகளை மீண்டும் குழப்பத்தில் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
ஜூன் நடுப்பகுதியில் இரு தலைவர்களும் G7 இல் சந்தித்த பின்னர், 30 நாட்களுக்குள் ஒரு புதிய பொருளாதார ஒப்பந்தத்தை முடிக்க ஒப்புக்கொண்டதாக கார்னி கூறிய பின்னர் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முறிவு ஏற்பட்டுள்ளது.
கனடாவின் திட்டமிடப்பட்ட டிஜிட்டல் வரி, ஒரு நிறுவனம் ஒரு காலண்டர் ஆண்டில் $20 மில்லியனுக்கும் அதிகமான கனடிய பயனர்களிடமிருந்து பெறும் டிஜிட்டல் சேவை வருவாயில் 3% ஆகும்.
மேலும் கொடுப்பனவுகள் 2022 வரை பின்னோக்கிச் செல்லுபடியாகும்.
இந்த நிலையில் திங்கட்கிழமை (30) வரி விதிப்பு நிறுத்தப்படும் என்று கனடாவின் நிதி அமைச்சு அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் டிஜிட்டல் சேவைகள் வரிச் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டத்தை முன்வைப்பார்.
டிஜிட்டல் வரி இரத்து செய்யப்படும் என்ற செய்தி வெளியானதும், ஆசிய சந்தைகளிலும் நம்பிக்கையான உணர்வு பரவியதும் பங்குச் சந்தைகளின் எதிர்கால விலைகள் உயர்ந்தன.
மெக்ஸிகோவிற்குப் பின்னர் கனடா இரண்டாவது பெரிய அமெரிக்க வர்த்தக பங்காளியாகவும், அமெரிக்க ஏற்றுமதிகளை அதிகம் வாங்குபவராகவும் உள்ளது.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியக தரவுகளின்படி, கடந்த ஆண்டு அது $349.4 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை வாங்கி அமெரிக்காவிற்கு $412.7 பில்லியன் ஏற்றுமதி செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் பைடன் நிர்வாகம் இந்த வரி தொடர்பான வர்த்தக தகராறு தீர்வு ஆலோசனைகளை கோரியிருந்தது, இது கனடாவின் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தக் கடமைகளுக்கு முரணானது என்று கூறியது.
ஏப்ரலில் ட்ரம்பின் பரந்த வரிகளிலிருந்து கனடா தப்பித்தது, ஆனால் எஃகு மற்றும் அலுமினியம் மீது 50% வரிகளை எதிர்கொள்கிறது.


















