கந்தானை பகுதியில் இன்று (03) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த அரசியல்வாதி மங்கள சமரவீரவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய சமீரா மனஹார என்பவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மனஹாராவுடன் பயணித்த உபாலி குலவர்தன என்ற நபர் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து காயமடைந்து உயிரிழந்தார்.
இன்று காலை கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காரில் பயணித்த நபர்கள் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
அதேநேரம் சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














