பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவின் நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீதிபத்மன் சூரசேன தலைமையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவின் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இந்த மாத இறுதியில் விசாரணை நிறைவு செய்யப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தேஷபந்துதென்னக்கோனை பதவி நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரனையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணைசெய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு பல்வேறு சந்தர்ப்பங்களில் கூடி விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில் விசாரணை நிறைவுசெய்யப்பட்டதன் பின்னர் அதன் அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அறிக்கைகள் ஆராயப்பட்டு சபாநாயகரினால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தேஷபந்து தென்னக்கோன் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு எதிர்வரும் 8 ஆம் திகதி பிரதிவாதி மற்றும் மனுதாரர்தரப்பிலான எழுத்துபூர்வ அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இருதரப்பினரும் எதிர்வரும் 8 ஆம் திகதி பிற்பகல் 3.30க்கு முன்னதாக அறிக்கையினை விசாரணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இத்தேவேளை, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிகக்கப்பட்டுள்ள பிரேரனையில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அண்மையில் சாட்சியங்களை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.