கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி குறித்து சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அவருக்கு தன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் குடியேற்றத்திற்கு கேரி ஆனந்தசங்கரி முன்னர் ஆதரவு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் மார்க் கார்னி, ” குறித்த விடயம் தொடர்பில் கேரி ஆனந்தசங்கரி வெளிப்படையாகச் செயற்பட்டார் எனவும், அவர் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், கேரி ஆனந்தசங்கரி ” LTTE மற்றும் World Tamil Movement தொடர்பான எந்தவொரு தேசிய பாதுகாப்பு தீர்மானங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளமாட்டேன் எனத் தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.














