வெளிவிவகாரத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, டச்சு தூதர் திருமதி போனி ஹோர்பாக்கை நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் மற்றும் இலங்கையில் உள்ள வரலாற்று கலைப்பொருட்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்புதல் ,குறிப்பாக பண்டைய பனை ஓலை புத்தகங்களை மீட்டெடுப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது திருமதி போனி ஹோர்பாக் நாட்டிற்கு செய்த சேவைக்கு பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.



















