தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய சந்தேக நபர் மாத்தறை பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி, வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
வீட்டின் வாயிலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.














