• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை – சுவிட்சர்லாந்திற்கு இடையிலான புலம்பெயர்வு கூட்டாண்மை குறித்த நிபுணர்களின் மூன்றாவது கூட்டம்!

இலங்கை – சுவிட்சர்லாந்திற்கு இடையிலான புலம்பெயர்வு கூட்டாண்மை குறித்த நிபுணர்களின் மூன்றாவது கூட்டம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/07/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புலம்பெயர்வு கூட்டாண்மைக்கான, நிபுணர்களின் மூன்றாவது கூட்டம், செவ்வாயன்று (29) பெர்னில் நடைபெற்றது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன மற்றும் சுவிஸ் கூட்டாட்சி நீதி மற்றும் காவற்துறைத் திணைக்களத்தின் இடம்பெயர்வுக்கான இராஜாங்க செயலகத்தின் சர்வதேச அலுவல்களுக்கான பணிப்பாளரும், தூதுவருமான ஹென்ட்ரிக் க்ரோஸ்கோப் ஆகியோர் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கினர்.

2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து புலம்பெயர்வு கூட்டாண்மையின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இக்கூட்டம் மீளாய்வு செய்ததுடன், இருதரப்பு பாதுகாப்பான தொழிலாளர் இடம்பெயர்வுத் திட்டம் (SLMP) கடந்த ஆண்டு இலங்கை அரசாங்கத்திடம் முறையாக ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டாண்மையின் எதிர்காலப் பாதை குறித்து ஆலோசித்தது.

இத்திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து நிதியளித்ததுடன், இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான நிலைபேறான கட்டமைப்புகளை நிறுவனமயமாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பாதுகாப்பான, சீரான மற்றும் வழக்கமான புலம்பெயர்வை ஊக்குவிப்பதற்கும், தாய்நாடு மற்றும் சென்றடையும் நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு புலம்பெயர்வின் நன்மைகளை அதிகரிப்பதற்கும் இரு தரப்பினரும் தமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இதன்போது மேலும், புறப்படுவதற்கு முந்தைய நோக்குநிலை, புலம்பெயர்வு முகாமைத்துவம், திறன்சார் அபிவிருத்தி, மீள்-அனுமதி, மீள்-ஒருங்கிணைப்பு மற்றும் ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவது குறித்த விடயங்களில் ஆலோசனைகளில் கவனம் செலுத்தப்பட்டன.

குறிப்பாக, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறன்சார் அபிவிருத்திக்கான சுவிஸ் உதவி மற்றும் தேசிய ஆட்கடத்தல் எதிர்ப்புப் பணிக்குழுவுடன் (NAHTTF) ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இரு நாடுகளிலும் தற்போதைய புலம்பெயர்வு போக்குகள் மற்றும் உள்நாட்டு திறன்சார் அபிவிருத்திக் கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் அங்கீகரித்தல் மூலம் இலங்கை தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இலங்கை பிரதிநிதிகள் குழுவில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடத் தூதரகத்தின் பிரதிநிதிகளும் இருந்தனர்.

சுவிட்சர்லாந்து பிரதிநிதிகள் குழுவில், புலம்பெயர்வுக்கான இராஜாங்க செயலகம், மத்திய காவற்துறை அலுவலகம், கூட்டாட்சி வெளிநாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கினர்.

Related

Tags: Sri Lankaswitzerlandஇலங்கைசுவிட்சர்லாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாட்ஸ்அப் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

Next Post

யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!

Related Posts

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!
இலங்கை

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

2026-03-17
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!
இலங்கை

வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய! update

2026-03-17
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!
இலங்கை

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!

2026-03-17
பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி
யாழ்ப்பாணம்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ

2026-03-17
8 இலட்சம் பேரின் மின்சார இணைப்புகள் துண்டிப்பு!
இலங்கை

இதுவரை மின் துண்டிப்பு இல்லை.. ஆனால் இனி? மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

2026-03-17
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

2026-03-17
Next Post
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!

ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து, இந்திய நட்சரத்திரங்கள் முன்னேற்றம்!

ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து, இந்திய நட்சரத்திரங்கள் முன்னேற்றம்!

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய! update

0
கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

0
இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.