• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டு தாக்கப்பட்டு மயமான இளைஞன் சடலமாக மீட்பு!

இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டு தாக்கப்பட்டு மயமான இளைஞன் சடலமாக மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/09
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என அழைப்பு எடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் மாயமாகிய இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மாயமாகிய நிலையில் இன்று காலை(09) குறித்த குடும்பஸ்தர் குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முத்தையன் கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதலில் 32வயதுடைய குடும்பஸ்தரொருவரே காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து நேற்றுமுன்தினம் (07) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதனையடுத்தே நேற்றையதினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுதினர் ஒருவரால் தாெலைபேசியில் கூறப்பட்டுள்ளது.

அதனையடுத்து நேற்று இரவு ஐவர் சென்றுள்ளனர்.

இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளார்.

இதனையடுத்து இன்றையதினம் இராணுவ முகாமிற்கு வந்த இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

மாயமாகிய குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி வலை விட்டு தேடுதல் நடவடிக்கையையும் மேற்கொண்டும் இதுவரை குறித்த நபர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் குறித்த காணாமல் போன இளைஞனின் சகோதரரால் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சகோதரர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே இவ்வாறு காணாமல் போனதை அடுத்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related

Tags: Muthaiyan Kattukulamsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிதாக குற்றச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

வெனிசுலாவின் ஜனாதிபதியை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை அதிகரிப்பு!

Related Posts

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்
இலங்கை

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

2026-02-04
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்
அம்பாறை

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு
அம்பாறை

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

2026-02-04
3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!
இலங்கை

3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

2026-02-04
9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!
இலங்கை

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

2026-02-04
Next Post
வெனிசுலாவின் ஜனாதிபதியை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை அதிகரிப்பு!

வெனிசுலாவின் ஜனாதிபதியை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை அதிகரிப்பு!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும்  தொடர் போராட்டம்!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் தொடர் போராட்டம்!

முல்லைதீவில் ராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு – நீதியான விசாரணை வேண்டும்!

முல்லைதீவில் ராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு - நீதியான விசாரணை வேண்டும்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

0
தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

0
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

0
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.