மீகொட பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ இன்று மதியம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, தலங்கமவில் சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகொட, ஆட்டிகல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இன்று (12) மதியம் உயிரிழந்தார்.
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது காரில் வந்த குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
பாதுக்கை, வட்டரெக பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணித் தகராறுகள் தொடர்பாக உயிரிழந்த சாந்த முதுங்கொட்டுவ பொலிஸில் முறைப்பாடுகள் சிலவற்றை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















