முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைக்காக இன்று (20) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ள பணமோசடி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.















