லங்கா சால்ட் லிமிடெட் நிறுவனம் அதன் அயோடின் கலந்த உப்பு பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நிறுவனத்தின் தலைவர் நந்தன திலகா இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, 400 கிராம் அயோடின் கலந்த உப்புப் தூள் பாக்கெட்டின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
1 கிலோ கிராம் பாக்கெட்டின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக அடுத்த வாரம் முதல், 400 கிராம் உப்புத் தூள் பாக்கெட் 100 ரூபாவுக்கும், 1 கிலோ உப்புத் தூள் பாக்கெட்டை 200 ரூபாவுக்கும், 1 கிலோ கல் உப்பு பாக்கெட் 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்.
மேலதிகமாக, நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 400 கிராம் உப்புத் தூள் பாக்கெட் சதோச விற்பனை நிலையங்களில் 90 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விலைக் குறைப்பு செயல்படுத்தப்பட்டதாக அவர் மேலும் விளக்கினார்.















