நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் நடிகை அபர்ணா என்பவரை தனது இளம் வயதில் காதலித்தாக நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி பெரும் பேசுபொருளாகியுள்ளது.
குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில் ” எனது தந்தை சினிமாவுக்காக பெங்காலி கற்றுக் கொள்ளவில்லை. பிரபல பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. அவருக்காகவே பெங்காலி மொழியை கற்றுக் கொண்டார்.

அவர் மீது கொண்ட அதீத காதல் காரணமாகவே ‘ஹே ராம்‘ படத்தில் ராணி முகர்ஜீயின் பெயரை அபர்ணா என வைத்தார்” இவ்வாறு ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் வழங்கிய செவ்வி இணைத்தில் வைரலாகி வருகின்றது.
கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக கமல் மற்றும் ரஜினி இணைந்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.



















