2026 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று லியோனல் மெஸ்ஸி கூறினார்.
38 வயதான அவர் வியாழக்கிழமை (04) பியூனஸ் அயர்ஸில் வெனிசுலாவை 3-0 என்ற கணக்கில் வென்ற ஆர்ஜென்டினாவின் போட்டியில் இரண்டு கோல்களை அடித்தார்.
இது சொந்த மண்ணில் அவர் விளையாடிய இறுதி உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விரிவாக்கப்பட்ட போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றிருந்த நடப்பு உலக சாம்பியன்களான ஆர்ஜென்டீனா தொடக்கம் முதல் இறுதி வரை இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.
போட்டியின் பின்னர் எட்டு முறை பாலன் டி’ஓர் விருதினை வென்ற மெஸ்ஸி, அடுத்த ஆண்டு தான் உடல் நிலை எவ்வாரு இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு 2026 உலகக் கிண்ணம் தொடர்பான தனது முடிவு இருக்கும் என்று கூறினார்.
அதாவது, தென் அமெரிக்க உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் இதுவரை 36 கோல்களை அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி, சர்வதேச அரங்கிலிருந்து விலகுவது இன்னும் கடினம் என்பதை ஒப்புக்கொண்டார்.
அவரது உடல் நிலையினை கருத்திற் கொண்டு அவரது தீர்மானங்கள் அமையும்.
எவ்வாறெனினும், வெனிசுலாவுக்கு எதிரான ஆர்ஜென்டினாவின் வெற்றி அவர்களின் தலைவருக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான இரவை உறுதி செய்தது மட்டுமல்லாமல், 2026 ஆம் ஆண்டுக்குள் உறுதியான போட்டியாளர்கள் என்ற அவர்களின் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டியது.


















