அம்பலாங்கொடை, ஹீனட்டிய வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்த விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














