வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் குறித்த பெண் சுருக்கிட்டு தொங்கியதை அவதானித்த தோட்டத் தொழிலாளர்கள் வட்டவளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வட்டவளை குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய கண்ணன் மணிராணி எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் வட்டவளை பொலிஸார்,மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














