லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வனப்பகுதியில் வசிக்கும குறித்த சிறுத்தைப்புலி இரவு வேளைகளில் தங்கள் வீடுகளுக்கு அருகில் இரை தேடி வருவதாகவும், செல்லப்பிராணிகளான நாய்கள் மற்றும் கோழிகளை இழுத்துச் செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த சிறுத்தைபுலி வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயை இழுத்துச் செல்லும் சீசீ டீ வி காணொளி பதிவு ஒன்று வெளியாகியுள்ளது
இதன்காரணமாக இரவு வேளைகளில் நடமாடுவது பாரிய ஆபத்தாக உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
எனவே குறித்த சிறுத்தைபுலியை வேறு பொருத்தமான இடத்தில் விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.















