2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவினால் நாடளுமன்றத்தில் இன்று (26) சமர்ப்பிக்கப்பட்டது.
2026 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களை உள்ளடக்கிய ஒதுக்கீட்டு சட்டமூலம், கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒதுக்கீட்டு சட்டமூலத்தின்படி, 2026 ஆம் ஆண்டில் மொத்த அரசாங்கச் செலவு ரூ.4,434 பில்லியன் ஆகும்.
வரவிருக்கும் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் நிதி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை 634 பில்லியன் ரூபாயாகும்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ரூ.618 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பொது நிர்வாக அமைச்சுக்கு ரூ.596 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.














