கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளின் விசாரணை இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக வெற்றி கழகம், இதற்காக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தது.
இதை தொடர்ந்து பிற மனுக்களுடன் சேர்த்து தமிழக வெற்றி கழகத்தின் மனுவையும் இணைத்து இன்று விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மனு மீதான விசாரணை இன்று (10) நடைபெற்றது.














