வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘மகேஷ் பண்டார’வின் மைத்துனர், சிறப்புப் படை அதிகாரிகளால் கூறிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்புப் படைத் தளபதி துணைப் பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வாவின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின் பேரில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பன்னல பொலிஸ் பிரிவின் மாகந்துர, கோனாவில பகுதியில் நேற்றுயதினம் (09) சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கோனாவில, மாகந்துர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்பீட்டர் வகை ஆயுதம்,
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ பிஸ்டல் ஒன்று, பிஸ்டலுக்கான ஒரு தோட்டா கோப்பு ,
07, 9மிமீ தோட்டாக்கள், 09, 12-ரக போரா தோட்டாக்கள், 01 வாள், 1,100 ரூபாய் பணம், தேசிய அடையாள அட்டையுடன் கூடிய 01 பணப்பை என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் உள்ளிட்ட சான்று பொருட்கள் மேலதிக விசாரணைக்காக பன்னல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.














