நவி மும்பை அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்ததில் 6 வயது சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நவி மும்பையில் பிரதான பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 10வது தளம் திடீரென தீப்பிடித்ததுடன் 11 மற்றும் 12ம் தளத்துக்கும் தீ வேகமாக பரவியுள்ளது.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தை அடுத்து உடனடியாக அவ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதுடன் உயிரிழந்தவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர்.
இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மின்கசிவு கோளாறால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.














