மிரிஹான பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணியின் கொலை வழக்கில் சுமார் ஒரு வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாரதி ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி சமர்ப்பித்த பிணை விண்ணப்பத்தை பரிசீலித்ததைத் தொடர்ந்து, மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார நேற்று (27) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, சந்தேக நபருக்கு ரூ.500,000 ரொக்கப் பிணையும், தலா ரூ.100,000 பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளும் வழங்கப்பட்டன.
நீதிமன்ற அனுமதியின்றி சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்த நீதிபதி, வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.
பிணை நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபர் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முன்னியாக வேண்டும்.
இந்த நிபந்தனைகளில் ஏதேனும் மீறப்பட்டால், பிணை இரத்து செய்யப்பட்டு, சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்றும் நீதிபதி மேலும் தெரிவித்தார்.
கிரிந்த, புஹுல்வெல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், இறந்த பெண் சட்டத்தரணியின் சாரதியாகப் பணியாற்றியவர.
மேலும் 2024 செப்டம்பர் 21 அன்று அவரது கொலை தொடர்பாக மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.














