கடந்த ஆண்டு செர்பியாவில் ரயில் நிலைய விதானம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 16 பேரின் ஆண்டு நினைவு நாளை அனுட்டிக்கும் முகமாக ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் என கணக்கிட்டு நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் 16 நாட்கள் நடை பவனி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்த நினைவு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி காலை 11:50 மணியளவில் நோவி சாட் ரயில் நிலையம் தாழ்வாரத்தின் கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 16 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டியது, இந்த சோகம் அரசாங்க ஊழல் மற்றும் செலவுக் குறைப்பின் விளைவாகும் என்று மாணவர்கள் கோபமடைந்தனர்.
இதேவேளை, இந்த சம்பத்திற்கு ஆரம்பத்தில் அரசாங்கம் பொறுப்பு கூறினாலும் அதனை மறந்து புதிய தேர்தல்கள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கிறது என மாணவர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் செர்பியாவின் பிரதமர் மற்ற அரசாங்க அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தார்.
ஆனாலும் இதுவரை கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக யாரும் குற்றம் சாட்டப்படவில்லை அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லைஏ என மாணவர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் முதல் சேர்பியாவில் உள்ள அணைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து 16 நாட்கள் பேரணி ஒன்றை நடத்த உள்ளனர்.



















