“ஆங்கிலோ ஜிஹாதி” என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர், ஒரு பெரிய வணிக வளாகத்தில் குண்டுவெடிப்பு மற்றும் ரசாயனத் தாக்குதலைத் திட்டமிட்டதாக தெரிவித்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
(Howden, East Yorkshire) கிழக்கு யார்க்ஷயரின் ஹவுடனைச் சேர்ந்த 21 வயதான ஜோர்டான் ரிச்சர்ட்சன் (Richardson ) , தனது பையில் திறன்கூடிய வெடிகுண்டு செய்முறையை எடுத்துச் சென்றதற்காக கூறி பிடிபட்ட பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
(Manchester Arena) மான்செஸ்டர் அரினா குண்டுவெடிப்பாளர் பயன்படுத்திய ISIS வெடிகுண்டு தயாரிக்கும் வீடியோவிற்கான இணைப்பும் ரிச்சர்ட்சனிடம் இருந்துள்ளதுடன் இது அதிக வெடிக்கும் TATP ஐ எவ்வாறு தயாரிப்பது என்பதைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் கைது செய்யப்படும் பொழுது அவரிடம் ஒரு தாள் இருந்ததாகவும் அதில் ”மறைக்கப்பட்ட இடத்தை அடையுங்கள், எரிவாயு முகமூடியைப் பயன்படுத்துங்கள், உடை அணியுங்கள், கூட்டத்திற்குள் அனைத்து கையெறி குண்டுகளையும் வீசுங்கள், பார்வையாளர்களைச் சுடுங்கள், அருகில் வருபவர்களை குத்துங்கள், உயிருடன் பிடிபடாதீர்கள்.” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுதங்களைப் பெறுதல், வெடிக்கும் பொருட்களை ஆராய்தல், சாத்தியமான இடங்களைக் கண்டறிதல் மற்றும் தாக்குதலுக்குத் தேவையான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு பயங்கரவாதச் செயல்களைத் தயாரித்ததற்காக ரிச்சர்ட்சன் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இவருக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.














