இங்கிலாந்து சிறையிலிருந்து இரண்டாவது கைதி தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அரசியல்வாதிகளும் பொதுமக்களும் காவல்துறை மீது கடும் கோபத்தை வெளிகாட்டிவருகின்றனர்.
தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது கைதிகளைத் தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இது சாதாரணமாக அடிக்கடி நிகழ்கிறது என்பதை அரசாங்க புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 12 மாதங்களில் 262 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டதாகவும் இது முந்தைய ஆண்டை விட 115% அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்காக 12 மாத சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஹடுஷ் கெர்பர்ஸ்லேசி கெபாடு (Hadush Gerberslasie Kebatu) , நாடு கடத்தப்பட வேண்டிய நிலையில் தவறுதலாக விடுவிக்கப்பட்டார்.
கோடையில் ஒரு சிறிய படகில் இங்கிலாந்துக்கு வந்த எத்தியோப்பிய நாட்டவரான இவர் , வடக்கு லண்டனில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதற்கு முன்பு சுமார் 48 மணிநேரம் விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக சசுற்றித்திரிந்துள்ளார்.
இதேவேளை, அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பும் , HMP வாண்ட்ஸ்வொர்த் ( HMP Wandsworth ) அல்ஜீரிய நாட்டவரான பிரஹிம் கடூர்-செரிஃப் ( Brahim Kaddour-Cherif) என்பவரையும் தவறுதலாக விடுவித்துள்ளது.
இதேவேளை, அதன் பின்னர் சர்ரே காவல்துறை 35 வயதான வில்லியம் ஸ்மித் என்பவரையும் தேடுவதாக அறிவித்தது. மோசடி குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு 45 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் திங்களன்று சிறை ஊழியர்களின் இரண்டாவது தவறுதலில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.














