போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாடளாவிய ரீதியாக நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,099 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் கீழ் நேற்றைய தினம் 1,087 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது, 731 கிராம் ஐஸ், 165 கிராம் ஹெரோயின் மற்றும் 33 கிலோ கிராம் கஞ்சாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலதிகமாக 36,120 கஞ்சா செடிகள், 1,400 மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனைகளில் கைது செய்யப்பட்ட 1,099 சந்தேக நபர்களில், 36 சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் 57 பேர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்களுக்காக மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் நடந்து வருகின்றன.














