முன்னாள் யூடியூபர் ஜேக் பாலுடன்(Jake Paul) சண்டையிட அந்தோணி ஜோசுவா(Anthony Joshua ) மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியனான ஜோசுவா, கடந்த செப்டம்பரில் பிரிட்டிஷ் போட்டியாளரான டேனியல் டுபோயிஸிடம்(Daniel Dubois ) ஐந்தாவது சுற்றில் தோல்வியடைந்ததிலிருந்து நீண்ட காலமாக போட்டியில் களமிறங்கவில்லை.
இந்நிலையில் யூடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பாலுக்கு எதிரான போட்டியில் அந்தோணி ஜோசுவா தனது 14 மாத இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜோசுவா டிசம்பர் மாதத்தில் மியாமியில் பவுலுடன் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

















