இங்கிலாந்தின் நியூபோர்ட்டில் குழந்தை வறுமை அதிகரித்து வாழ்கின்றமை அதிர்ச்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு ஏழு குழந்தைகளில் ஆறு பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, (Middlesbrough ) மிடில்ஸ்பரோ மற்றும் (Thornaby East ) தோர்னாபி ஈஸ்டில் உள்ள ஒட்டுமொத்த தொகுதியிலும் கூட, வறுமையில் வாடும் குழந்தைகளின் விகிதம் பாதியை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வரவிருக்கும் அரசாங்கத்தின் குழந்தை வறுமை மூலோபாய திட்டம் பல குடும்பங்களுக்கு நிதி உதவியை மட்டுப்படுத்தும் இரண்டு குழந்தைக்கான பலன் வரம்பை நீக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு இந்த நிலைமை ஆதரவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த வரம்பு மற்றும் அதிக குழந்தை வறுமை விகிதங்களுக்கு இடையே உள்ள நேரடி தொடர்பு ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும் இந்த வரம்பை நீக்குவது அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய உதவும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வரம்பானது அடிப்படை அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதைக் கடினமாக்குவதாகவும் இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.














