காசாவில் ஒரு சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையை (ISF) நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு பாகிஸ்தான் ஆதரவாக வாக்களித்தது, ஆனால் அதன் நிரந்தரப் பிரதிநிதி அசிம் இப்திகார் அகமது தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து திருப்தி இல்லை என்றும் முக்கியமான தெளிவுபடுத்தல்கள் தேவை என்றும் எச்சரித்தார்.
பாலஸ்தீனிய அரசுக்கான பாதை, ஐ.நா.வின் பங்கு, மற்றும் சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையின் சரியான அதிகாரம் ஆகியவை தீர்மானத்தில் தெளிவாக இல்லை என்று பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது.
எனினும், பிற முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளிடையே பாகிஸ்தான் மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்டிருப்பதால், அது சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உள்நாட்டில் ஒரு படையெடுப்பை எதிர்கொள்வது குறித்து இஸ்லாமாபாத் சிக்கலான சமநிலையை கையாளுகின்றமை குறிப்பிடத்தக்கது.


















