இளவரசர் ஆண்ட்ரூ (Andrew) ஜெஃப்ரி எப்ஸ்டீனின் (Jeffrey Epstein’s ) பாலியல் கடத்தல் நடவடிக்கைகளைப் பற்றிய விசாரணையில் பதிலளிக்கத் தவறியமை காரணமாக அவர் பல விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளார்.
(House Committee on Oversight and Government Reform ) ஹவுஸ் கமிட்டி ஆன் ஓவர்சைட் அண்ட் கவர்ன்மென்ட் ரிஃபார்ம், முன்னாள் இளவரசரை நவம்பர் 20 ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு கேட்டிருந்தது, ஆனால் அவர் இந்த காலக்கெடுவைக் கடைப்பிடிக்கவில்லை.
இந்நிலையில் ஆண்ட்ரூவின் அமைதி “பல விடயங்களை வெளிப்படுத்துகிறது” என்று உறுப்பினர்கள் (Robert Garcia) ராபர்ட் கார்சியா மற்றும் சுஹாஸ் சுப்ரமணியம் கூறியுள்ளனர்.
இதேவேளை, எப்ஸ்டீனுடனான அவரது நட்பு மற்றும் (Virginia Roberts Giuffre) வர்ஜீனியா ராபர்ட்ஸ் கியூஃப்ரேயின் சாட்சியங்கள் காரணமாக அவருக்குத் தெரிந்திருக்கக்கூடிய தகவல்கள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர்.
இந்நிலையில் ஆண்ட்ரூ சட்டப்படி காங்கிரஸுடன் பேச வேண்டிய கடமை இல்லை என்றாலும், அவர் கடைசியாக 2019 இல் நியூஸ்நைட் நேர்காணலில் பேசியது ஒரு சர்ச்சையாக அமைந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கமிட்டியின் பணி அவர் இல்லாமலும் தொடரும் என்றும், இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பொறுப்பேற்க வைக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.



















