வியட்நாமில் பெய்து வருகின்ற கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரையில் 12 பேர் காணாமல் யோயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்தப் பேரழி வுகாரணமாக இதுவரையில் சுமார் 1 இலட்சத்து 86 ஆயிரம் வீடுகள், வெள்ளத்தில் மூழ்கி அழித்துள்ளதுடன் மூன்று மில்லியன் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி தொடக்கம், வியட்நாமில் மின்சாரம் துண்டிக்கப்பட்டள்துடன் இதனால் இரண்டு இலட்சம் குடும்பங்கள் மின்சார வசதிகளை இழந்துள்ளன.
மேலும் நிலச்சரிவுகள் காரணமாக வீதிகளில் போக்குவரத்து தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வாரம் வியட்நாம் இரண்டிற்கும் மேற்பட்ட சூறாவளி ஏற்பட்டதுடன் பாரிய பாதிப்புக்களும் ஏற்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 1.5 மீற்றரை கடந்துள்ளது.
வியட்நாமின் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய கோப்பி உற்பத்திப் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை வியட்நாமில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மண்சரிவுகள் முக்கிய வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளை சேதப்படுத்தியதை அடுத்து அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.















