(Motability ) மோட்டபிலிட்டி திட்டத்தில் சொகுசு கார்கள் நீக்கப்படுவது போன்ற பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை, இந்த திட்டத்தின் படி ஆடம்பர கார்கள் இனி கிடைக்காது என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், பயனாளிகள் தங்கள் தனிப்பட்ட சுதந்திர கொடுப்பனவின் (PIP) ஒரு பகுதியை ஈடாக கொடுத்து வாகனங்களை வாடகைக்கு எடுக்க உதவும் இத்திட்டம், கண்ணுக்குத் தெரியாத குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஆடம்பர வாகனங்கள் கிடைப்பதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்குப் பின்னர் வருகிறது.
பிரித்தானிய கார் சந்தையை ஆதரிக்கும் நோக்கத்துடன் இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் திட்டத்தின் மூலம் குத்தகைக்கு விடப்படும் வாகனங்களில் 2035-க்குள் 50% பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் என்று மோட்டபிலிட்டி இயக்கங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன.
இந்த திட்டத்தின் படி பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் போன்ற ஆடம்பர பிராண்டுகள் உடனடியாக நீக்கப்படும், அதே நேரம் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட நிசான் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியும் இதில் உள்ளடங்குகிறது.
இந்த சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரம் வளர்ந்து, ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் நம்புகிறார்.














