ஹொங்கொங்கில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தானது புதன்கிழமை (26) இரவு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.
இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 44 பேர் உயிரிழந்ததுடன், 279 பேர் காணாமல் போயுள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் இன்னும் தீப்பரவிய உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து குடியிருப்பாளர்களை மீட்டு வருகின்றனர்.
நியூ டெரிட்டரிஸின் புறநகர்ப் பகுதியான தாய் போ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு கட்டிடங்களில் புதன்கிழமை பிற்பகல் இந்த தீ விபத்து தொடங்கியது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (27) காலை வரை, தீ இன்னும் அணைக்கப்படவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்தன.
அதேநேரம், தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர்.
பலியான 44 பேரில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனர்த்தத்தின் பின்னர் குறைந்தது 62 பேர் காயமடைந்தனர், பலர் தீக்காயம் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதன்கிழமை, தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்தார்.














