வெள்ளை மாளிகை புதன்கிழமை (26) அருகே இரண்டு அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதிகாரிகள் இதை இலக்கு வைக்கப்பட்ட பதுங்கியிருந்து நடத்திய தாக்குதல் என்று விவரித்தனர்.
மேலும், பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலின் போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளர்.
விசாரணை அதிகாரிகள் சந்தேக நபரை வொஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயதான ஆப்கானிஸ்தான் நாட்டவரான ரஹ்மானுல்லா லகன்வால் என அடையாளம் கண்டுள்ளனர்.
தாக்குதல் பயங்கரவாதச் செயலாக விசாரிக்கப்பட்டு வருவதாக பெயர் வெளியிட விரும்பாத நீதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் போரின் போது அமெரிக்காவிற்கு உதவிய ஆப்கானியர்களுக்கான சிறப்பு விசா திட்டத்தில் ரஹ்மானுல்லா லகன்வால் 2021 இல் அமெரிக்காவிற்கு வந்தார்.
அவர் தனது விசாக் காலத்தை கடந்த நிலையில் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரண்டு வீரர்களும் உள்ளூர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் இருப்பதாக புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (FBI) பணிப்பாளர் காஷ் படேல் கூறினார்.



















