தொழில் அல்லது கல்வி நடவடிக்கைகளுக்காக நாட்டுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் இங்கிலாந்துக்கான நிகர புலம்பெயர்வு 445,000 குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ஜூன் மாதம் வரையிலான கடந்த 12 மாதங்களில், நாட்டின் நிகர இடம்பெயர்வு 204,000 என மதிப்பிடப்பட்டுள்ளது – இது ஆண்டுக்கு
ஆண்டு 69 சதவீதம் குறைந்து 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகக் குறைந்த வருடாந்திர எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் உச்சக்கட்டத்திலிருந்து நாட்டிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெளியேறுபவர்களுடன் ஒப்பிடும்போது குறைந்து வருகிறது.
நிகர இடம்பெயர்வின் உச்சத்தில் இங்கிலாந்து மக்கள் தொகையில் 944,000 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டதாக 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அண்மைய ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு நிகர புலம்பெயர்வு ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட அதிக அளவில் உச்சத்தை எட்டியது, பின்னர் அது மிகவும் கடுமையாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (27) காலை வெளியிடப்பட்ட 2025 ஜூன் வரையிலான ஆண்டின் மாற்றத்தைக் காட்டும் புள்ளிவிவரங்கள், இங்கிலாந்து மக்கள்தொகையில் 204,000 பேர் சேர்க்கப்பட்டதைக் காட்டுகின்றன.
இது ஒரு வருடத்திற்கு முந்தையதை விட மூன்றில் இரண்டு பங்கு குறைவாகும் – 2024 ஜூன் வரையிலான ஆண்டில் 649,000 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாட்டினர் இங்கிலாந்துக்கு வருவது குறைந்து வருவதால், நிகர புலம்பெயர்வு திடீரென வீழ்ச்சியடைந்து வருகிறது.
ஜூன் மாதம் வரையிலான ஆண்டில் சுமார் 70,000 ஐரோப்பிய ஒன்றிய நாட்டினர் இங்கிலாந்தை விட்டு வெளியேறியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இது பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் இங்கிலாந்துக்கான புலம்பெயர்வில் தொடர்ந்து குறைந்து வரும் போக்கை எடுத்துக் காட்டுகின்றது.














