நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள தகவல் தொடர்பு தடங்கல்களால் சில விமானிகள் மற்றும் பணியாளர்கள் சிலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்துப் பணியாளர்களும் செயற்பாட்டு வழிகாட்டுதல்களைப் பெறுவதற்காக உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.














